ஸ்டாலின் பச்சோந்தி போன்று நிறம் மாறுபவர். போட்டுத் தாக்கிய எடப்பாடி

தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து, வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வை சேதாரப்படுத்தாமல்வ் இடுவதில்லை. கண்ணனூர், துறையூர், மணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த நேரத்திலும் ஸ்டாலின் மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தார்.


திமுக தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க. பிளவுப்படும் என்கிறார். அண்ணா திமுகவில் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 11 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள். அம்மா அவர்கள் 15 ஙூ ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள். அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு 3 ஆண்டுகள் 10 மாதங்கள் வெற்றிக்கரமாக ஆட்சி செய்து வருகிறோம். ஆக மொத்தம் அதிமுக 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு தந்துள்ளது. 

மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்து துறைகளிலும் விருதுகளை பெற்று வருகிறது. வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சமூக நலம், நீர் மேலாண்மை, எரிசக்தி போன்ற துறைகளில் தேசிய விருதுகள் பெற்று வருகிறது. எங்கள் அரசு நிர்வாக திறன் மிக்க அரசு. அதனால்தான் துறைகள் தோறும் விருதுகள் பெற்று வருகிறோம். ஆனால், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லி வருகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவே இல்லை. 

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் தமிழக மக்களை தங்ளுடைய பிள்ளைகளாக எண்ணி ஆட்சி செய்தனர். இன்னொரு கட்சி இருக்கின்றது தங்கள் பிள்ளைகளுக்காகவே கட்சி நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் பச்சோந்தியை விட மோசமாக நிறம் மாறுபவர்.

தேர்தல் வந்தால் தான் மக்கள் ஞாபகம் வரும். தமிழகத்தை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தான் ஆள வேண்டுமா? இவர்களுக்கு என்ன தமிழகம் பட்ட போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? இவர்கள் குடும்பதை தவிர யாராலும் தமிழகத்தை ஆளா முடியாதா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் இந்த தேர்தல்.

இதோடு வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடம் தரக்கூடாது. அண்ணா திமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக முடியும். இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். எங்களைப் பொருத்தவரை மக்கள்தான் முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளார்.