திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி! டென்சனில் ஸ்டாலின்!

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


முதற்கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன், மூத்த நிர்வாகிகள் சௌந்தரராஜன்,  ஜி ராமகிருஷ்ணன் மற்றும் சம்பத் ஆகியோர் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசித்து தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன்:எங்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட இரண்டு தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்தது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாங்கள் சில தொகுதிகள் போட்டியிட ஒதுக்ககோரி கோரிக்கை வைத்திருந்தோம் .

அவர்கள் சில தொகுதிகளை தருவதாக கூறினார்கள். இவை குறித்து எங்கள் கட்சியின் கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டு நாளை மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை அல்லது நாளை மறுதினம் எந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட போகிறது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.