ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு சல்யூட் அடிக்காமல் அப்படியே போய்விட்டார்..!அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி

இந்த ஆண்டு அதிசயமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றினார். கொடியேற்றியதும் கொடிக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்பது மரபு.


ஆனால், ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு அப்படியே போய்விட்டார். அதனால், தேசியக் கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு சல்யூட் அடிக்காத ஸ்டாலின் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் திரு.வி.கல்யாணசுந்தனராரின் 137ஆவது பிறந்த நாளை முன்னிட்டு) சென்னை தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், பென்ஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தேசியக் கொடிக்கு மிகப்பெரிய அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை திமுக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்து ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி நான் பார்த்ததே இல்லை. அவர் பள்ளிக்கூடம் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது என்பதால் தேசியக் கொடி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதனை காவல் துறை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

சீக்கிரம் நடவடிக்கை எடுக்கட்டும்.