முதலமைச்சர் பதவிக்காக ஒருபோதும் சுயமரியாதையை இழக்க மாட்டேன்! மு.க.ஸ்டாலின் அதிரடி!

முதலமைச்சர் பதவியை அடைவதற்காக சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் நான் இழக்க மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு அவர்களின் திருமண விழாவில் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்திவைத்தார்.

 மேலும் இந்தத் திருமண விழாவில் திருநாவுக்கரசர் , திமுக கட்சியை சேர்ந்த பலர் மற்றும் பாஜகவை சேர்ந்த பி.டி.அரச குமார் ஆகியோரும் பங்கேற்று திருமண விழாவை சிறப்பித்தனர்.

திருமண விழாவை நடத்தி வைத்த திரு. ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பின்பு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சதி செய்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். 

ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி வலியுறுத்துவதே திமுக கட்சி தான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், முதல்வர் பதவி தமக்கு கிடைக்கும் என ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி கூறியதை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார்.

அதுமட்டுமில்லாமல் முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தன்னுடைய சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.