கட்டாய உருதுக்கு ஆதரவு! இந்திக்கு எதிர்ப்பு! ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம்!

பள்ளிகளில் கட்டாய உருது கொண்டு வரப்படும் என்று கூறி முஸ்லீம்களிடம் வாக்கு சேகரித்தவர் ஸ்டாலின் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் இந்தி பேசாத மாநில மாணவர்கள் 3வது மொழியாக கட்டாயம் இந்தியை கற்க வேண்டும் என்று உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக்கலப்பிடத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது.  தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும்

 மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எல்லாம் அறிக்கையும் வெளியிட்டார் ஸ்டாலின். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நமக்கு நாமே என்று தமிழகம் முழுவதும்சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் வேலூரில் முஸ்லீம்களுக்கு அளித்த வாக்குறுதி தற்போது வைரல் ஆகி வருகிறது.

வாணியம்பாடியில் பல்வேறு முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேசினார். அப்போது பள்ளிகளில் உருது கட்டாயமாக்கப்படும் என்றும் இதற்கான வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உருதை கட்டாயமாக்கும் சட்டம் இயற்றப்படும் என்றும் அப்போது ஸ்டாலின் கூறியுள்ளார். 

தற்போது இந்த தகவல் வெளியாகி ஸ்டாலினை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. பள்ளிகளில் உருதை கட்டாயமாக்கினால் தமிழ் மொழி அழிந்துவிடாதா இந்தியை மட்டும் தான் கட்டாயமாக்கினால் தமிழ் மொழி அழியுமா என்று ஸ்டாலினை நோக்கி கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

தினமணி