ரஜினியைக் கண்டு அலறும் ஸ்டாலின்! காரணம் என்ன தெரியுமா?

எப்போதாவது ஒரு முறை வாய் திறந்து எக்குத்தப்பாக எதையாவது சொல்வது ரஜினி ஸ்டைல். அது வைரலாகி தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. இதைக் கண்டு ஆளும் கட்சியில் இருந்து எதிர்க் கட்சிகள் வரை வயிற்றெரிச்சல் படுவது தனிக்கதை. இவர்களில் ரஜினியைக் கண்டு நிஜமாகவே அலறுவது ஸ்டாலின் என்பதைத்தான் அவரது சமீபத்து நடவடிக்கைகள் காட்டுகின்றன.


ஸ்டாலினுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியில்லை என்று ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அதனை நிரூபிப்பது போன்றுதான் சகல விஷயங்களும் நடந்து வருகின்றன. எடப்பாடி அரசு விரைவில் காணாமல் போய்விடும்,  தேர்தல் வந்தால் எளிதில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஸ்டாலின் கனவு கண்டார். அந்த வகையில் பதவி பறிப்புக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களைவிட அதிகமாகவே டி.டி.வி. தினகரன் மீது நம்பிக்கை வைத்தார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவது போன்று  எடப்பாடி அரசு ஜம்மென்று நகர்ந்துகொண்டே இருக்கிறது. தினகரன் இப்போது நாளுக்கு நாள் டல்லடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியின் பா.ஜ.க. பேச்சு ஸ்டாலினை மிரட்டி விட்டதாம். நேற்று (14.11.2018) நெருங்கிய வட்டத்தினருடன் அமர்ந்து ரஜினி பற்றி பேசிக்கொண்டு இருந்தாராம் ஸ்டாலின். பகல் 11 மணிக்குத் தொடங்கிய பேச்சு மதியம் 2:45 வரை நீடித்ததாம். வழக்கமாக 1:30 மணிக்கே சாப்பிட கிளம்பிவிடும் ஸ்டாலின் பசியை மறந்து பேசிக்கொண்டு இருந்தாராம். அந்த பேச்சின் சாரம்சம் இதுதான்.

நாம தினமும் கட்சி, மீட்டிங், விழான்னு போறோம். நம்மளை ஒரு மீடியாவும் பெரிசா மதிக்க மாட்டேங்குது. ரஜினி என்னத்தையோ ரெண்டு நிமிசம் பேசிட்டுப் போறார். உடனே ஒவ்வொரு மீடியாவும் திரும்பத்திரும்ப போடுறாங்க. விவாதம் நடத்துறாங்க. அவர் சும்மா இருந்தாலும், இந்த மீடியாக்களை அவரை விட மாட்டாங்க. கட்சி ஆரம்பிக்க வைக்க எல்லா வேலையும் செய்றாங்க. இதை நாம எப்படி தடுத்து நிறுத்துவது என்று கேட்டிருக்கிறார்.

அவருடன் கூட்டணி வைக்கலாம் என்று சிலர் கூற, முறைத்துப் பார்த்தாராம். அவர் நம்மிடம் கூட்டணிக்கு வரவேண்டுமே தவிர, நாம் போகக்கூடாது என்று சொன்னாராம். உடனே கூடவே இருந்த சில ஜால்ராக்கள் ஆமாம் போட்டதாம்.

இப்படி பந்தா பார்த்துத்தான் போன சட்டசபைத் தேர்த்தல்ல கோட்டை விட்டார் ஸ்டாலின். விஜயகாந்தை அழைத்து வந்திருந்தால் ஆட்சியில் அமர்ந்திருக்கலாம். ஈகோ பார்த்ததால் தோற்றே போனார். இப்போது ரஜினியிடமும் ஈகோ பார்த்து வீட்லேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான் என்று அவருடன் கூட இருக்கும் தி.மு..க. நிர்வாகிகளே புலம்புகிறார்கள். 

தானும் பதவிக்கு வர மாட்டார், அடுத்தவங்களையும் வர விட மாட்டார் என்று ஸ்டாலின் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

பாவம்தான்!