எவ்ளோ செலவு பண்ணுவீங்க? நேர் காணலில் ஸ்டாலின் கேட்ட கேள்வி! அதிர்ந்து போன கனிமொழி!

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் எவ்வளவு செலவு பண்ணுவீங்க என ஸ்டாலின் கேட்ட கேள்வியால் கனிமொழி ஒரு கனம்ஆடிப் போய் உள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர் காணல் நடைபெற்றது- தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணலை ஸ்டாலின் நடத்தினார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட ஒரே ஒருவர் தான் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேறு யாரும் இல்லை கலைஞரின் மகளும் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி தான்.

கனிமொழியை ஸ்டாலின் நேர்காணல் செய்தார். அப்போது தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளதா? என ஸ்டாலின் கேட்டதாகவும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளது என கனிமொழி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் கனிமொழி தான் செய்த கட்சிப்பணிகளையும், கலந்து கொண்ட போராட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார். அப்போது திடீரென தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் எவ்வளவு செலவு செய்வீங்க என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி ஒரு கனம் ஆடிப்போய் உள்ளார். ஆனால் திடீரெ சிரித்துக் கொண்டே உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறி அனுப்பியுள்ளார்.

கனிமொழியும் சிரித்துக் கொண்டே நேர்காணல் நடைபெற்ற இடத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.