எடப்பாடி பழனிச்சாமிக்கு உறவினர் நடத்தும் தனி விமானத்தில் இரண்டாவது முறையாக பயணம் செய்து கொல்கத்தாவுக்குப் போயிருக்கிறார் ஸ்டாலின். அங்கு நடைபெறும் விஷயங்களைப் பார்த்து, காங்கிரஸ் இல்லாமல் தனியே தேர்தலை சந்திக்கும் ஆசை வந்திருப்பதாக்த் தெரிகிறது.
எடப்பாடியின் ஃபிளைட்! பக்கத்தில் மாப்பிள்ளை! கொல்கத்தாவில் ஸ்டாலின்! அலறும் காங்கிரஸ்!

அமைச்சர் ஜெயக்குமார் தெரிந்தோ தெரியாமலோ உண்மையைக் கக்கினார். ‘இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களும் ஆசைப்படுகிறார்கள்’ என்று சொன்னார். அது நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின்.
எடப்பாடியின் உறவினருக்கு சொந்தமான திருவேணி எர்த் மூவர்ஸின் தனி விமானத்தில் கொல்கத்தாவுக்குப் பயணமானார் ஸ்டாலின். கட்சிக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினும் எடப்பாடியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த விமானப் பயணம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் கொல்கத்தா போனதுக்குப் பின்னே மிகப்பெரிய அரசியல் வில்லங்கம் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள். தமிழகம் தாண்டி டெல்லி விவகாரத்தை இதுவரை கனிமொழிதான் பார்த்துவந்தார். இப்போது அந்த இடத்தை ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் அபகரித்துக்கொண்டார். தி.மு.க. என்பது குடும்பச் சொத்து என்பதால், அதைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லைதான்.
இந்த விமானத்தில் ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, சபரீசன் மற்றும் தி.மு.க.வின் ஐ.டி. விங்க் தலைவரான சுனில் ஆகியோருடன் நாகராஜன் என்பவரும் பயணம் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் தலைவராக இருந்தால் போதாது, இந்திய அளவில் புகழ் பெறவேண்டும் என்று மருமகன்தான் ஸ்டாலினை அழைத்துச் சென்றாராம்.
ஜாலி டிரிப்பாக ஸ்டாலின் கொல்கத்தா போனாலும், அவரது நடவடிக்கைகளை காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். ஏனென்றால் இப்படித்தான் காங்கிரஸுடன் கைகோர்த்து அன்பாக பேசியவர்தான் உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ். இப்போது அவர் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸைக் கைவிட்டு இரண்டே தொகுதிகள் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்.
இதனைப் பார்த்து ஸ்டாலினும் இதே பாணியில், லோக்கல் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைத்து, வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ்க்கு கை கொடுக்கலாம் என்று எண்ணலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதே நேரம் ஸ்டாலின் போனால் அவருக்குத்தான் லாஸ், நமக்கு தினகரன் இருக்கிறார் என்று திருநாவுக்கரசர் சந்தோஷப்படுகிறாராம்.
நரேந்திரமோடியை வீழ்த்துவதுதான் இரண்டாவது சுதந்திரப் போர் என்று கொக்கரித்திருக்கும் ஸ்டாலின், அவ்வப்போது அமீத் ஷாவிடமும் பேசிவருவதுதான் ஆச்சர்யமான உண்மை. கொல்கத்தாவில் இருந்து வரும்போதும் காங்கிரஸ் ஆதரவு நிலையில்தான் வருவாரா என்பதைப் பார்க்கலாம்.