மு.க.ஸ்டாலின் எப்போதுமே ஒரு தத்தி! நிரூபித்த சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா! அதிர்ச்சியில் திமுக!

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பு தேர்வுத் தாளில் சாதிபாகுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகள் இருந்ததாக கூறி ஸ்டாலின் விடுத்த அறிக்கை தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.


கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் கேள்வித் தாள் ஒன்று வைரல் ஆகி வருகிறது. முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலான கேள்விகளை கொண்ட அந்த கேள்வித்தாளில் எந்த பள்ளி, எந்த வருடம் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை. ஒரு பேப்பர் கட்டிங் போல் அது உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கேள்வித்தாள் பேப்பர் கட்டிங்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த கேள்வித்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6ம் வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று ஸ்டாலினே கூறியிருந்தார்.

"அதோடு மட்டும் அல்லாமல் சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்."

என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதாவது ஸ்டாலின் இந்த கேள்வித்தாள் கேந்திரிய வித்யாலயா 6ம் வகுப்பு தேர்வில் இடம்பெற்றிருந்து என்று கூறியிருந்தார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள கேள்வித்தாளில் அப்படி எந்த குறிப்பும் இல்லை. இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமையிடமான டெல்லியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது அந்த அறிக்கையில், கேந்திர வித்யாலயா பள்ளிகளின் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான கேள்வித்தாள்களில் சாதி பாகுபாட்டையும், வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் இடம் பெற்று இருந்ததாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பட்டியல் இனத்தவர் மற்றும் முஸ்லிம்கள் குறித்து சர்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்று இருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவலில் உண்மை இல்லை என்று கேந்திர வித்யாலயா மற்றும் CBSE சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில், எந்த ஒரு பள்ளியிலும் இது போன்ற கேள்வித்தாள் உருவாக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை மண்டல இணை ஆணையர் மாணிக்கசாமி தெரிவித்து உள்ளார்.

இதே போல மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் ( CBSE ), சமூக வலைதளங்களில் பரவிவரும் வினாத்தாள் வடிவமைப்பு CBSE பள்ளிகளையோ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையோ சார்ந்தது அல்ல என்றும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் என்று உலா வரும் தகவலும் போலி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சமூகவலைதள வாசிகள், CBSE & KV பள்ளிகள் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அதாவது ஸ்டாலின் கூறியபடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கேள்வித்தாள் உருவாக்கப்படவில்லை என்று நிரூபிணம் ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வமாகவே கேந்திரிய வித்யாலயா தனது லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் அவசரப்பட்டு ஒரு விஷயத்தில் தலையிட்டு அவமானப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா என்பது மிகவும் புகழ்பெற்ற மற்றும் அனைத்து மக்களின் ஆதரவு பெற்ற ஒரு பிரமாண்ட கல்வி நிறுவனம் ஆகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தின் மீது கையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் வரும் ஏதோ ஒரு துண்டுப்பேப்பரை வைத்துக் கொண்டு அவதூறு செய்தால் ஸ்டாலினை தத்தி என்று தானே கூற வேண்டும் என்கிறார்கள் சமூகவலைதளவாசிகள்.

திமுக எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்றத்தில் உள்ள சமார் 30 எம்பிக்களின் தலைவர் என்று பல பொறுப்புகளை கொண்ட ஸ்டாலின் இப்படி ஒரு புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனத்தின் மீது அவதூறு செய்யும் போது அதற்கு ஆதாரம் இல்லாமல் செய்தால் எப்படி?