என் வாழ்க்கையை மாற்றிய அந்த தொழில்! கமல் மகள் ஸ்ருதி வெளியிட்ட முக்கிய தகவல்!

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் சினிமா திரை உலகில் கால்பதித்து இன்று உடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.


நடிகை ஸ்ருதி முதன்முதலில் பாலிவுட்டில் தன்னுடைய திரைப் பயணத்தை துவங்கினார்.  பின்னர் தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன்  நடித்து பெரும் புகழ் பெற்றார். 

இவர் இன்றுடன் திரை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இதனை பார்த்த இவருடைய  ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு  வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

நடிகை ஸ்ருதி வெளியிட்ட செய்தியில் " நான் இன்றுடன் திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். திரையுலகின் மூலம் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக எண்ணுகிறேன்,  என்னுடைய கடின உழைப்பின் மூலம் இன்னும் சிறந்த இடத்தை பிடிப்பேன் என்று நம்புகிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் பெரிதளவு மாற்றிக் கொண்டுள்ளேன்.

மேலும் என் மீது அளவு கடந்த அன்பினையும் ஆதரவையும் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு வருட கால இடைவெளி எனக்கு என்னை மதிப்பீடு செய்யும் ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.   என் இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .  இவ்வாறாக இந்த பதிவை நிறைவு செய்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். 

இந்தப் பதிவைப் பார்த்த இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும்  வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் .தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு வருட கால இடைவெளிக்கு பின் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை எஸ் பி ஜனார்த்தனன் இயக்குகிறார் .