இலங்கைக்குள் நுழைய ரஜினிக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை மறுத்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன், அவர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..! ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்! தெறிக்கும் ட்விட்டர்!

அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது ஈழத்திற்கு வருகை தந்து தமிழக மக்களை ரஜினி சந்திக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதனை ஏற்று ரஜினியும் ஈழத்திற்கு செல்ல ஒப்புக் கொண்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ரஜினி அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு விசா வழங்க இலங்கை மறுத்துவிட்டதாகவும் தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது குறித்து பேசிய விக்னேஸ்வரன் தான் ஒரு போதும் ரஜினியை இலங்கை வருமாறு அழைக்கவில்லை என்றும், அவரும் இலங்கை வருவதாக கூறவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே ரஜினிக்கு இலங்கை விசா கொடுக்க மறுத்துள்ளதாக வெளியான தகவலை இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை.
என்று நமல் ராஜபக்சே கூறியுள்ளார். இதன் மூலம் ரஜினிக்கு இலங்கை விசா தர மறுத்து அவமானப்படுத்திவிட்டதாக தகவல்களை பரப்பியவர்கள் மூஞ்சில் கறி பூசப்பட்டுள்ளது. மேலும் ரஜினியின் ரசிகர்கள் தாங்கள் என்று கூறி ராஜபக்சேவும், அவரது மகனும் ரஜினியின் புகழை மேலும் பரப்பியுள்ளனர்.