இந்தியாவை சந்தேகப்படும் இலங்கை... கடும் கோபத்தில் மோடி

இலங்கையில் தீவிரவாதிகளால் குண்டு வெடிப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே இந்தியாவில் இருந்து தகவல் போனது. ஆனால், அதனை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவாக பெரும் சோகத்தை சம்பாதித்துள்ளனர்.


இந்த நிலையில், இலங்கை தீவிரவாதத்திற்கு எதிராக உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று நட்புக்கரம் நீட்டியது. உடனே அதை தட்டிவிட்டிருக்கிறது இலங்கை. ஏனென்றால், இந்த தீவிரவாத குண்டு வெடிப்பில் இந்தியாவின் கை இருக்கிறதோ என்று அதிபர் சிறீசேனா சந்தேகப்படுகிறாராம்.

ஏற்கெனவே, இந்திய உளவு அமைப்பான  ரா, என்னை கொலை செய்ய சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு வேலைகள் விறுவிறுவென நடந்தன. இந்தக் குழப்பம் அத்தனைக்கும் காரணம் இந்தியா என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில்தான், இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 330க்கும் அதிகமான மக்கள் இறந்து போயிருக்கின்றனர். மிகவும் தாமதமாக இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது பெரும் சந்தேகம் கிளம்பியுள்ளது. அதனாலே, இது குறித்து உதவ இந்தியா தயார் என அறிவித்தது. 

உடனே கொந்தளித்திருக்கும் இலங்கை, ‘எங்கள் நாட்டு விவகாரத்தைப் பார்க்க எங்களுக்குத் தெரியும், இந்தியா உள்ளே வரவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது. இந்த பதில் கேட்டு மோடி கோபமாகி இருக்கிறார். அவர்களுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டும் இந்தியாவின் உதவி தேவைப்பட்டது, இப்போது சீனா மட்டும் போதுமா என்று கொந்தளித்திருக்கிறார்.