திரிஷா - பிரபல ஹீரோவின் அந்தரங்க புகைப்படம்! நடிகை ’ஸ்ரீரெட்டி வெளியிட்டார்!

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி தற்போது டகுபதி குடும்பத்தை குறி வைத்து அலற விடுகிறார்.


பட வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதாக கூறி ஒரு பட்டியலைத் தயார் செய்து வைத்து, அந்தப் பிரபலங்களை அலற விட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இதில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். கடைசியாக தெலுங்கு முன்னணி நடிகரான வெங்கடேசை இவர் வம்புக்கிழுத்து இருந்தார்.

 தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸையும் ஸ்ரீ ரெட்டி விட்டுவைக்கவில்லை. தற்போது டகுபதி குடும்பத்தினரை கோதாவுக்கு அழைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகர் ராணா டக்குபதி நடிகை திரிஷா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார்.

கூடவே இன்னொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருப்பது தான் தற்போது பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அந்த புகைப்படத்தில் ராணா டகுபதியின் சகோதரர்‌ அபிராம் டகுபதி நடிகை ஸ்ரீரெட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த படி போஸ் கொடுக்கிறார்.

இந்த புகைப்படங்களை சுட்டிக்காட்டி ராணா டகுபதியின்  தந்தை சுரேஷ் பாபுவை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. குடும்பம் பெண்கள் குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் சுரேஷ் பாபுவின் பிள்ளைகள் தான் இவர்கள் என்று ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரும் தங்கள் தாத்தாவையே மிஞ்சி விடுவார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். ராமநாயுடு ஸ்டூடியோவில் தான் இது நடந்திருப்பதாகவும் கொளுத்தி போட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தன்னுடைய பிரச்சனைக்கு நடிகை திரிஷா - நடிகர் ராணாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளத. த்ரிஷா - ராணா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியானது தான் என்றாலும் தற்போது ஸ்ரீரெட்டி மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளது.