இன்று சூரிய கிரகணம்! அனைத்து கோவில்களும் மூடப்படும்..! ஆனால் இந்த கோவில் மட்டும் திறந்திருக்கும்! மெய்சிலிர்க்க வைக்கும் காரணம்!

சூரிய கிரகணத்தின் போதும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.


ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஸ்ரீ காளஹஸ்தியில் ஞானபிரசுராம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் நாளை காலை 8 மணி முதல், காலை 11:16 மணி வரை சூரிய கிரகணம் பிடிக்கிறது. இருந்தாலும் வழக்கம்போல இந்த கோவிலின் நடை திறக்கப்பட்டு இருக்கும் என்று வேத பண்டிதர்கள் கூறியுள்ளனர்

அதாவது, "சூரிய கிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி சிவனை தரிசிப்பவர்களுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் சூரிய கிரகணத்தின் போது நடை சாத்தப்பட்டிருக்கும்.

ஆனால் காளஹஸ்தி சிவன் கோவில் சூரியன் மற்றும் சந்திர கிரகணங்களில் வழக்கம்போல திறந்திருக்கும். பக்தர்களும் சிவனை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவர். இதுதான் இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். மேலும், சூரிய கிரகணத்தின் ஆல் கோவிலில் நாளை நடக்கவிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது" என்று கூறினர். இந்த செய்தியானது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.