இந்தியாவில் கால் பதித்த ஒரே வாரத்தில் 1 மில்லியன் பயனர்களை தாண்டியது ஸ்பாட்டிபை!!!

இந்தியாவில் கடந்த வாரமே கால் பதித்த ஸ்பாட்டிபை செயலியை 1 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்பாட்டிபை செயலி என்பது அமேசான் மியூசிக், காணா, சாவன் போன்ற மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமாகும்.  தற்போது களமிறங்கியுள்ள ஸ்பாட்டிபை மற்ற மியூசிக் நிறுவங்களுக்கு பெரும் போட்டியாக உள்ளது.


இந்த செயலியை பயன்படுத்தி தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள பாடல்களை கேட்டு மகிழலாம். மேலும் பிடித்த பாடல்களை வைத்து பயனர்கள் தங்களுக்கான பிலே லிஸ்ட்டை(Play List) உருவாக்கி கொள்ளாலாம்.


இந்த செயலியில் 4 கோடிக்கும் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த பாடலையும் தேர்வு செய்த்து கொள்ளலாம்


இந்த செயலியை வடிக்கையாளர்கள் இரு வழிகளில் பயன்படுத்தலாம்.  இலவச சேவை மற்றும் மாத சந்தாவாக ரூ.119 செலுத்தியும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.


மேலும் மனவர்களுக்காகவே ப்ரீத்தியேகமாக பாதி கட்டணத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அதாவது மாணவர்கள் மாதம் ரூ.60 செலுத்தி ஸ்பாட்டிபை இசை சேவையை பெற்று கொள்ளலாம்