82 வருட சாதனையை முறியடித்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்!!!

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா டெஸ்ட் போட்டிகளில் அதி வேகமாக 200 விக்கெட்களை கைப்பற்றி 82 வருட சாதனையை முறியடித்துள்ளார்.


1936 ல் ஆஸ்திரேலியா அணியின் க்ரிம்மெட் தனது 36 வது டெஸ்டில் 200 விக்கெட்களை வேகமாக வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

அபுதாபியில் நியூஸிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து அணியின் சோமர்வில்லேவை அவுட் செய்ததன் மூலமாக யாசிர் ஷா தனது 33வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்களை வீழ்த்தி 82 வருட சாதனையை முறியடித்துள்ளார்.

யாசிர் ஷா சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஒரேநாளில் 10விக்கெட்களை (இரண்டு இன்னிங்சிலும்) வீழ்த்தி சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது