பல கோடி ரூபாய் சொகுசு காரில் அசுர வேகம்! தொழில் அதிபர் மகனால் பலியான கூலித் தொழிலாளி!

அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் தன் கட்டுப்பாட்டை இழந்ததில் இருவர் மீது மோதிய சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் லக்ஷ்மணன் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு கவின் என்ற மகன் உள்ளார். இவர் தன் மகனுக்கு  பென்ட்லி" என்ற சொகுசு காரை பரிசளித்தார். இன்று அந்த காரில் அவிநாசியிலிருந்து அனைப்புத்தூர் பகுதிக்கு வேகமாகச் சென்றார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக செல்ல தொடங்கியது. துரதிஷ்டவசமாக முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் முத்துநாயகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மருதாச்சலம் என்பவர் மீது கார் மோதியது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விபத்துக்களை ஏற்படுத்தியபோதும் தன் காரை நிறுத்தாமல் கவின் தன் வீட்டிற்குள் நுழைந்தார். காரானது தொழிலதிபர் லக்ஷ்மணனின் வீட்டிற்குள் நுழைவதை கண்ட பொதுமக்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லட்சுமணன் வீட்டிற்கு வந்து கவிதை கைது செய்தனர். இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.