அசத்திய புஜாரா!!! சொதப்பிய மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் டெஸ்ட் மைதானத்தில் டிசம்பர் 6 (இன்று) தொடங்கியது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 2  ரன்களிலும் , முரளி விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒரு முனையில் புஜாரா மட்டும் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இறங்கிய ரஹானே 13 ரன்களில் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 37 ரன்களிலும் மற்றும் ரிஷாப் பான்ட் 25 ரன்களிலும் ஒரு நாள் போட்டியை போல் வேகமாக ஆடி தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் புஜாரா 123 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்இழப்பிற்கு 250 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்சேல் ஸ்டார்க் , ஹேசில் வுட் , கம்மின்ஸ் , நாதன் லியோன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.