சாதாரண காய்ச்சலுக்காக 1 லட்சம் ரூபாய் வரை செலவழித்ததாக பிரபல நடிகை கூறியது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஒரு நாளைக்கு ரூபாய் 1 லட்சம்! ஹாஸ்பிடல் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

கோலிவுட்டில் வலம் வரும் புதுமுக கதாநாயகிகளுள் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்த "கனா" திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இவருக்கு கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது எஸ்.கே.பாஸ்கரன் இயக்கிய 'மெய்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நிக்கி சுந்தரம் புதுமுக கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படமானது மருத்துவத் துறையில் நடைபெறும் சீர்கேடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படமானது 23-ஆம் தேதி அன்று வெளியாகயுள்ளது. படத்தின் செய்தியாளர் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா தான் இந்த படத்தில் நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்டார். "சில மாதங்களுக்கு சாதாரண காய்ச்சலால் அவதிப்பட்டேன். மருத்துவரிடம் சென்று பரிசோதிக்குமாறு என்னை என் தாயார் கூறினார். நான் அவ்வாறு மருத்துவமனைக்கு சென்றபோது சில விஷயங்களை கண்டு அதிர்ந்தேன்.
சாதாரண காய்ச்சலுக்காக என்னை தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகளை எடுக்க வற்புறுத்தினர். நான் எவ்வளவோ முறையிட்டும் மருத்துவர்கள் என்னை அத்தகைய பரிசோதனைகளை எடுக்க வைத்தனர். இறுதியாக மருத்துவ செலவை பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
சாதாரண காய்ச்சலுக்கு சென்ற என்னிடம் 1 லட்சம் ரூபாய் பெற்று விட்டனர். இதனால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். இத்தகைய மலிவான மருத்துவ சீர்கேடுகளை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன்" என்று கூறினார். படத்தின் இயக்குநர்,கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.