இந்த குகைக்கு ஒரு முறை சென்றால் போதும்! முன்ஜென்ம பாவங்களும் நீங்கும்! எங்குள்ளது தெரியுமா?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலப்பள்ளி வட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருவில்வமலை. இங்கே உள்ள வில்வாத்ரி நாதர் கோவில் மிகவும் பிரபலம்.


மகாவிஷ்ணுவின் அம்சமான ராமர் லக்ஷ்மணர் சன்னதிகள் எதிர் எதிரே அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இந்த ராமரைத்தான் வில்வாத்ரி நாதர் என்று அழைக்கின்றனர்.

இந்த திருவல்வமலைக்கு அருகில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் புனர்ஜனி என்னும் அதிசய குகை இருக்கிறது. அதாவது மறுபிறப்புக்குகை. இயற்கையாக உருவான குகை அது. நெடுநாட்களாக மழைநீர் ஓடி அங்கிருந்த கனிமங்களைக் கரைத்து உருவான வெற்றிடம் குகையாக ஆகியிருக்கிறது. குகைக்குள் நுழையும் இடம் கொஞ்சம் பெரிதாக இருக்கும். ஆனால் போகப்போக மிகச்சிறிதாக ஆகிவிடும். முற்றிலும் இருட்டு. இதனுள் நுழையும் அன்பர்கள் நடந்தும், உட்கார்ந்தும், படுத்தும், தவழ்ந்தும், உருண்டும் செல்லவேண்டும். ஒரு தடவை இந்த குகைக்குள் நுழைந்து திரும்பினாலே அவர்களது பாவங்கள் அடியோடு நீங்குவதாகவும் ஒரு ஜென்மம் முடிவதாகவும் சொல்கிறார்கள்.

கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியன்று ஏராளமான பக்தர்கள் புனர்ஜனி குகைக்குச் சென்று தங்கள் பாவங்களைத் தொலைப்பதோடு தங்கள் பிறவியையும் கழித்து மறு ஜென்மம் எடுத்த நம்பிக்கையோடும் புத்துணர்வோடும் திரும்புவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இங்குராம நவமி’, ‘நிறமாலை’ என்ற திருவிழாக்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை ஏகாதசி அன்று குருவாயூரப்பன் குருவாயூரிலிருந்து புறப்பட்டு திருவில்வமலை வந்து வில்வாத்திரிநாதரை தரிசித்து திரும்பிச் செல்வதாக ஐதீகம். அன்று பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் இங்கு கூடி ஏகாதசி திருவிழாவில் பங்கு பெற்று இறையருளை அள்ளிச் செல்கிறார்களாம்.