தோஷங்களை நீக்கும் தங்கப்பல்லி, வெள்ளிபல்லி எங்கே இருக்குன்னு தெரியுமா? தோஷங்களைத் தீர்க்கலாம் வாங்க!

சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு மகன்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர்.


ஒருநாள் அவர்கள் பூஜைக்குக் கொண்டு வந்து தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும் படி சபித்தார். பிறகு சிஷ்யர்கள் வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு எனத் தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து வரதராஜப் பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

பெருமாள் அவர்கள் இருவரும் மோட்சம் செல்ல வழி காட்டினார். அதோடு அவர்கள் சரீரத்தை பஞ்ச உலோக பல்லிகளாக தனக்குப் பின்புறம் இருக்கும்படி வரமளித்தார். என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும் சூரியன் சந்திரன் இதற்கு ஆட்சி என்று மோட்சம் அளித்தார்.

இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜ பெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம் வெள்ளியில் இரு பல்லிகள் அமைந்துள்ளன. பக்தர்கள் அந்த பல்லிகளைத் தொட்டு வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதால் நம்புகிறார்கள்.