கோவிலில் பலி பீடம் ஏன், எதற்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? அதன் மகிமை என்ன தெரியுமா?

ராஜகோபுரத்தை அடுத்துள்ளது பலிபீடம்.


அதன் அருகில் சென்று வீழ்ந்து வணங்கும்போது பக்தன் மனதில் எழும் எண்ணமே மிக முக்கியமானது. அங்கு அவனது கீழான எண்ணங்கள், இச்சைகள் அனைத்தும் வணங்கும்போது பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகிறது. அப்படி பலியிட்ட பின் தூய சிந்தனை, மேலான எண்ணத்துடன் அவன் எழ வேண்டும். அப்பொழுது மனிதத்தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்படும்.அந்த எண்ணத்தின் சக்தி, அவனைப் புதியபிறவி எடுக்க வைப்பதற்குச் சமமானது.