எண்களில் விசேஷமான எண் 9. வடமொழியில் 9 என்ற எண்ணுக்கு நவம் என்று பெயர். அதற்கு புதிய புதுமை எனும் பொருள்.
ஒன்பது என்ற எண்ணை கேலி செயாதீர்கள், எத்தனை ஆன்மிக மகத்துவம் கொண்டது தெரியுமா?

அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்.
நவவிரதங்கள் - சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்.,
நவ நிதிகள் – சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்.
நவவீரர்கள் – வீரவாகுதேவர், வீரகேசரி வீரமகேந்திரன், வீரமகேஸ்வரன், வீர ராட்சசன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன்.
நவ அபிஷேகங்கள் – மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், விபூதி.
நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்.
நவபாஷாணம் – வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்.
மேலும், நவசக்திகள், நவ தீர்த்தங்கள், நவரசங்கள், நவகிரகங்கள், நவமணிகள், நவ திரவியங்கள், நவ தானியங்கள், என அனைத்தும் 9 எண்ணாகத்தான் உள்ளது.
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும்9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
9 என்ற எண்ணை கேலிக்கையாக
எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.