சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு பலகாரம்! தீபாவளி ஸ்பெஷல்!

தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது பட்டாசுகளும் இனிப்புகளும் தான்.


ஆனால் சர்க்கரை நோயால் அவதிப்படும் மக்களால் இனிப்பு வகையை உட்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசைப்பட்டு ஒரு இனிப்பை கூட அவர்களால் சுவைக்க இயலாது. ஆனால் தற்போது சர்க்கரை நோயாளிகள் உண்பதற்காக பிரத்தியேகமாக இனிப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்க்கரைக்குப் பதிலாக எந்தவித வேதியல் கலப்புப் பொருளும் இன்றி, இயற்கையாகவே பழங்களில் இருந்து கிடைக்கும் லீவ்லோஸைப் பயன்படுத்தி, குலோப்ஜாமூன், லட்டு, பால்கோவா, மைசூர்பாகு, ஜாங்கிரி என அனைத்து வகையான ஸ்வீட் களையும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கரும்பில் இருந்து கிடைப்பது சுக்ரோஸ் அதுபோல பழங்களில் இருந்து கிடைப்பது லீவ்வோஸ். இந்த லீவ் ஓசை பயன்படுத்தி உருவாக்கப்படும் இனிப்பு வகைகளை சர்க்கரை நோயாளிகளும் எந்த ஒரு பயமின்றி உட்கொள்ளலாம். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. இதற்கு ஏற்ப லீவ்லோஸைப் பயன்படுத்தி, செய்யப்பட்ட இனிப்பு வகையாக இருப்பினும் அதனை அளவாக உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பழங்களில் இருந்து இயற்கை சர்க்கரையான லீவ்லோஸைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம் என்பதால் அதனை மேலைநாடுகளில் இருந்த தான் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்து வருகிறார்கள். லிவோசின் விடை சக்கரை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். ஆகையால் இதில் இருந்து பெறப்படும் இனிப்பு வகைகளும் விலை சற்று கூடுதலாக தான் இருக்கும். பொதுவாக லீவு போஸில் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் அதனுள் சேர்க்கப்படும் நெய் எண்ணெய் போன்ற பொருட்களை வைத்து அதனுடைய கலோரி எண்ணிக்கை மாறுபடும். 

தற்போது பயன்படுத்தப்படும் சர்க்கரையை உண்டால், ஒருவருக்கு எந்த அளவுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமோ, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, லீவ்லோஸ் இனிப்புப் பொருளை உண்டால் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. லீவ் ஓசை பயன்படுத்தி செய்யப்பட்ட இனிப்பு பலகாரங்களை தினமும் இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் கூட பயமின்றி அளவோடு உண்ணலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல நாம் அனைவருமே வாழ்வில் இனிப்பு அளவோடு உண்போம், வாழ்வில் நலமுடன் வாழ்வோம்..