அடேங்கப்பா, கார்த்திகை மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா? படித்துப் பாருங்கள், அசந்தே போவீர்கள்!

கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.


கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

கார்த்திகை தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

கார்த்திகைகளில் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறந்தது.

கார்த்திகை என்றால் நினைவுக்கு வருவது சோமவாரம் (திங்கட் கிழமை). சந்திரன் சிவபெருமாளை வணங்கி நலம் பெற்ற திருநாள். அதனால் இந்த சோமவாரத்தில் சிவ பெருமாள் சந்திர மெளலீஸ்வரராக எழுந்தருளி அருள் செய்வார். இந்த தினத்தில் வலம்புரிச் சங்கினால் செய்யப்படும் சங்காபிசேகம் செய்யப்படும்.

நாமும் கார்த்திகை திங்கட் கிழமையில் தண்ணீரும், பன்னீரும் கலந்து, பூக்களின் இதழ்களை சேர்த்து, ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து, நமக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி நம் வீட்டில் இருக்கும் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். வீட்டில் செய்ய முடியவில்லை என்றால், கோயிலுக்கு சென்று இந்த அபிஷேகத்தை தரிசனம் செய்து வரலாம்.கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.

கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.  கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ, விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிறு கிழமைகள் மிக சிறப்பானது. இது கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவதற்கான அற்புதமான விரத நாள்.