பங்குச் சந்தையில் களமிறங்கும் ஸ்பண்டனா! நீண்ட கால சேமிப்புக்கு இந்தப் பங்குகளை வாங்கலாமே..?

ஸ்பண்டனா ஸ்பூர்டி ஐ பி ஓ (Spandana Sphoorty IPO)


கிராமப்புற அடிப்படையிலான வங்கி சாரா நிதி நிறுவனமான இது 1998ல் தொடங்கப்பட்டது. பின்னர் 2003ல் இந்தியாவின் 6வது மைக்ரோ நிதி நிறுவனமாக அறியப்பட்டது இந்த  ஸ்பந்தனா ஸ்பூர்டி ஃபைனான்ஷியல் (SSFL) . பங்குச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் .அதன் ஆரம்ப பொது விற்பனையை (ஐபிஓ) 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு ரூ.  853 முதல்   856 வரையிலான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது 

ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த ஸ்பந்தனா ஸ்பூர்டி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் . இந்த மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனத்தின்  பங்குகளை ஊக்குவிக்க 

இதன் புரமோட்டர்கள் திட்டமிட்டுள்ளதால், அதன் மூன்று நாள் ஆரம்ப ஐபிஓ எனப்படும் பங்குச் சந்தைக்கு முந்தைய  விற்பனை ஆகஸ்ட் 5ம் தேதி திங்களன்று தொடங்குகிறது.

ஸ்பந்தனா ஸ்பூர்டி பைனான்ஸ் என்பது நாட்டின் நான்காவது பெரிய வங்கி சாரா நிதி நிறுவனம் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனம் ஆகும். ஜூன் 30 நிலவரப்படி இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ .4,437 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட மைக்ரோ கடன் வழங்கும் இந்நிறுவனம். நாடு முழுவதும் பன்முகப்படுத்தப்பட்ட இருப்பைக் கொண்டுள்ளது. இது கூட்டு பொறுப்புக் குழு மாதிரியின் கீழ் முதன்மையாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சுய உதவி குழுக்களுக்கும் கடன்களை வழங்கும் நிறுவனமாகும். 

ஸ்பான்டானா ஸ்பூர்டியில் நாடு முழுவதும் 7,062 ஊழியர்கள் உள்ளதாகவும் , இதில் 5,051 கடன் வசூல் உதவியாளர்களும் , ஜூன் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 929 கிளைகள் செயல்பட்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என  269 மாவட்டங்களில் செயல்படுகிறது.

வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் பிற நுண் நிதி நிறுவனங்களின் போட்டி அதிகரித்து வருகிறதாலும். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் அதன் மூலதன தளத்தை அதிகரிக்கவும் வர்த்தகத்திற்கு முந்தைய சலுகை விற்பனை மூலம் ரூ .1,201 கோடியை திரட்ட இலக்கு கொண்டுள்ளது,

ரூ .400 கோடி ரூபாய் ஐபிஓ விற்பனை மூலமும், 93 லட்சம் பங்குகளை ஆஃபர் மூலம் விற்பனை செய்வதன் மூலம்  801 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். அதற்காக  ஐபிஓ விற்பனையில்  ஒரு பங்கின் விலை ரூ .853-856 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிட்ட பிறகு, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5,487 - 5505 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இது போன்று பங்குச் சந்தையில் இறங்கியுள்ள மைக்ரோ கடன் நிறுவனங்களில் பந்தன் பேங்க் சந்தையின்   சொத்து மதிப்பு 34700 கோடியாகவும், அடுத்தபடியாக பாரத் ஃபைனான்சியல்‌ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17390 கோடியாகவும், முறையே உஜ்வன் ஃபைனான்ஸ் 11050 கோடியும், எக்விடாஸ் 2960 கோடியும் சந்தை மதிப்பினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டுகளில் பல வட இந்திய சிறு குறு நுண் கடன் நிறுவனங்கள் அதிக அளவில் சந்தையில் இறங்கியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம் என்கின்றனர் வணிக நிபுணர்கள்.

-மணியன் கலியமூர்த்தி