பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி!

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது


முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்தது. அந்த அணியின் டூபிளெஸ்ஸிஸ் 78 ரன்களும், ஹென்றிக்ஸ் 74 ரன்களும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணியின் ஷின்வரி 3 விக்கெட்களும் இமாட் வாசிம் 1 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களும் வெற்றி இலக்கை விரட்டி விளையாடினர். 

எனினும் அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186  ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 49 ரன்களும், ஹுசைன் தலட் 40 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியின் ஷம்சி மற்றும் கிரிஷ் மோரிஸ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வின் டேவிட் மில்லர் நான்கு கேட்ச்களையும் மற்றும் இரண்டு ரன் அவுட்களையும் செய்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாபிரிக்கா என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.