தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்த தீபக் சஹர்! வெற்றி இலக்கை எட்டுமா இந்தியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பாவுமா கேப்டன் டி காக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய டி காக் 52 ரன்களிலும் , பாவுமா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.