உலக கோப்பையில் களம் காண டிவில்லியர்ஸ் திடீர் முடிவு!

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவதற்காக கடைசி நேரத்தில் விருப்பத்தைத் தெரிவித்து இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 30- ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை மூன்று ஆட்டங்களில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் அவர்கள் ஏபி டி வில்லியர்ஸை பெரிதும் நம்பி இருந்தது அவர்களுக்கு பலவீனமாக அமைந்துள்ளது என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான தென்னாபிரிக்கா அணி தேர்வு அன்று அணிக்கு விளையாட விரும்புவதாக ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இதனை அணியின் கேப்டனான பாப் டு பிளெஸிஸ் மற்றும் பயிற்சியாளரான ஓட்டிஸ் கிப்ஸன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அணித் தேர்வாளரான  ஸோன்டியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அது நன்றாக இருக்காது, மேலும் இது தவறான முன்னுதாரணமாக இருந்துவிடும் என்று கூறி நிராகரித்துவிட்டார். அவர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் விளையாடி இருந்தால் மட்டுமே உலக கோப்பை அணிக்கு தேர்வாயிருக்க முடியும் என்பதனை முன்கூட்டியே அவரிடம் தெரிவித்துவிட்டதாக கூறி ஸோன்டோ மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பையில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றது. ஏபி டிவில்லியர்ஸ் இதற்கு பதிலளிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் " அனைத்து தென் ஆப்பிரிக்கா ரசிகர்களும் என் நிலையிலும் தென்னாபிரிக்க அணிக்குஆதரவாக இருக்க வேண்டும் உலகக்கோப்பையில் முன்னேறிச் செல்வது நம் அனைவரின் தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியானது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது