விடாது துரத்தும் சனி!! 10-வது முறையாக ஆசியாவில் டாஸ் தோற்ற தென்னாப்பிரிக்கா!! டு பிளசிஸ் பிளான் ஃபெயில்!!!!

தென்னாப்பிரிக்கா கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் டாஸ் போடுவதற்காக துணை கேப்டனை அழைத்து வந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.


தென்னாப்ரிக்கா-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா அணி தோற்றது. ஆனால் ஃபாஃப் டு பிளசிஸ் ஆசியாவில் நடந்த கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் டாஸில் தோற்றிருந்தார்.

3-வது டெஸ்ட் போட்டி நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்றது. இந்நிலையில் டாஸ் போடுவதற்காக, டு பிளசிஸ் அணியின் துணை கேப்டனான டெம்பா பவுமாவை அழைத்து வந்தார். விராட் கோலி நாணயத்தை சுண்டி விட்டபோது டெம்பா பவுமா கால் செய்தார். ஆனால் இந்த முறையும் விராத் கோலியே டாஸில் வெற்றி பெற்றார். இத்துடன் ஆசியாவில் நடந்த கடந்த 10 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு முடிந்த 9 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா அணி, 7-ல் தோல்வியும், 2-ல் ட்ராவும் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில் டெம்பா பவுமாவை டு பிளசிஸ் அழைத்து வந்ததற்கு, தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை ஆசியாவில் டாஸ் போடும்போது டு பிளசிஸ் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.