கணவருடன் மிக நெருக்கம்! புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி மகள் சொல்லும் சேதி!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தன்னுடைய இரண்டாவது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


நடிகர் ரஜினி, லதா தம்பதியரின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஆஸ்திரேலியாவில் கல்லூரி படிப்பை முடித்த இவர் அமெரிக்காவில் கிராபிக்ஸ் பணிகளில் நிபுணத்துவம் பெற்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா என்கிற படத்தை சவுந்தர்யா தயாரித்தார். படம் மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த சவுந்தர்யா ரஜினியை வைத்து 3டி அனிமேசன் முறையில் கோச்சடையான் படத்தை இயக்கினார். இந்த படமும் கமர்சியலாக படு தோல்வி. இதற்கு இடையே கடந்த 2010ம் ஆண்டு சவுந்தர்யா அஸ்வின் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சவுந்தர்யா – அஸ்வின் ஜோடிக்கு 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே சவுந்தர்யா தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை போயஸ் கார்டனில் தந்தை ரஜினி வீட்டில் சவுந்தர்யா வசித்து வருகிறார்.  இதற்கு இடையே சவுந்தர்யாவின் முன்னாள் கணவர்அஸ்வின் வேறு ஒரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் , விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பின்பு, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. 

இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் கணவர் விசாகனை சந்தித்த நாள் வருகிறதாம். அதனை கொண்டாட முடிவு செய்தே இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர் .