தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், நீச்சல் குளமொன்றில் சூப்பர்ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உல்லாசமாக விளையாடியிருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்துள்ளது.
நீச்சல் உடையில் ரஜினி மகள் வெளியிட்ட புகைப்படம்! பிறகு நடந்த விபரீதம்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் முதல் கணவன் அஸ்வினை விவாகரத்து செய்துவிட்டார். தமிழகத்தின் பிரபல தொழில் அதிபரான விஷால் என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அஸ்வினிற்கும் சௌந்தர்யாவிற்கும் ஒரு மகன் உள்ளார். இவர் பெயர் வேத்.
வேதின் புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவேற்றம் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் இருவரும் நீச்சல் குளத்தில் உல்லாசமாக விளையாடி வரும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் நீச்சல் குளத்தில் உல்லாசமாக இருப்பது போன்று எடுத்த புகைப்படம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ச்சை பெரிதாவதற்கு முன்பு அந்த புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் நீக்கிவிட்டார்.
இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.