இனிமேல் ஜில்ஜில்தான்... பாக்கெட் சைஸ் ஏ.சி. வந்தாச்சு - சோனி நிறுவனத்தின் அட்டகாச கண்டுபிடிப்பு

சட்டையில் மாட்டிக்கொள்ளும் முறையில் பாக்கெட் ஏ.சி.யை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தியா அதிக தட்பவெப்ப நிலையை கொண்டுள்ள நாடாகும். இங்கு வெயில் காலத்தில் மக்கள் வியர்வையில் குளிக்கும் நிலை எளிதாக உருவாகும். இந்த நிலையை போக்குவதற்கு சோனி நிறுவனம் தற்போது பாக்கெட் ஏ.சி.யை கண்டுபிடித்துள்ளது.

சட்டையின் சைஸ்களுக்கு ஏற்றவாறு S,M,L என்ற வகைகளில் பாக்கெட்கள் உருவாக்கி அதனுள் ஏ.சி.களை பொருத்தி கொள்ள  முடியும். ஏ.சி.யில் ஜில்லென்று குளிர்காற்றை அனுபவிக்கலாம். ரீசார்ஜ் முறையில் இதனை கண்டுபிடித்துள்ளனர். முழுவதுமாக சார்ஜ் செய்தவுடன் 2 மணிநேரத்திற்கு உபயோகப்படுத்த இயலும்.

இந்த பாக்கெட் ஏ.சி. ஆனது இந்திய ரூபாய் மதிப்பில் 8,992-க்கு விற்பனைக்கு வந்ததுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.