ஜெயலலிதாவை ஐட்டம் என்றும் விமர்சித்தவருக்கு ஜெயா டிவியில் உயர்ந்த பதவி! என்ன நடக்கிறது டிடிவி முகாமில்?

முன்னாள் முதலமைச்சரும் ஜெயா டிவியின் நிறுவனருமான ஜெயலலிதாவை ஐட்டம் என்று முன்னர் விமர்சித்ததவருக்கு தற்போது அதே ஜெயா டிவியில் டிஜிட்டல் ஹெட் பதவியை கொடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் சோனியா அருண் குமார். துவக்கம் முதலே அதிமுக எதிர்ப்பாளராக பலமுறை தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். அவ்வப்போது திமுகவிற்கு ஆதரவாக இவரது கருத்துகள் இருக்கம்.

ஜெயலலிதாவை தனிப்பட்ட ரீதியில் பல்வேறு முறை இவர் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஜெயா டிவியில் ஒரு ஜெயலலிதா பாடல் ஓடிக் கொண்டிருந்த போது ஜெயலலிதாவின் ஐட்டம் சாங் இன் ஜெயா டிவி என்று பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டவர் சோனியா.

இதன் பிறகும் கூட சோனியா அருண்குமார் தொடர்ந்து பெண்ணுரிமை தொடர்பான பதிவுகள், மோடி எதிர்ப்பு பதிவுகளில் தீவிரம் காட்டி வருபவர். நியுஸ் 7 தொலைக்காட்சியில் இருந்து இவரை இதனால் தான் வெளியேற்றினார்கள் என்று கூட சொல்வார்கள்.

இந்த நிலையில் சோனியா அருண்குமார் ஜெயா டிவியில் டிஜிட்டல் ஹெட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா அனுதாபிகள் ஜெயலலிதாவை 2012ம் ஆண்டு இவர் ஐட்டம் என்று விமர்சித்து வெளியிட்ட பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து வெளியிட்டு டிடிவி தினகரனிடம் நியாயம் கேட்டு வருகிறார்கள்.


ஜெயலலிதாவை ஐட்டம் என்று கூறியவருக்கா ஜெயா டிவியில் உயர் பதவி என்று அவர் கொந்தளிக்கிறார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் டிடிவி தினகரன் முகாம் அமைதியாக உள்ளது.