தாயின் தகாத உறவு..! ஊருக்கு ஒதுக்குப்புறமாக உல்லாசம்..! நேரில் பார்த்த மகன்..! பிறகு அரங்கேறிய பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஓட்டுனரை மகன் கொலை செய்திருக்கும் சம்பவமானது மாங்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான மாங்காடு பகுதிக்கு அருகே மலையம்பாக்கம் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ரஞ்சித்குமார் என்ற 30 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அபிராமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த விமல் என்ற 19 வயது இளைஞரின் தாயாருடன் ரஞ்சித்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் அதிகளவில் வயது வித்தியாசம் இருந்தது. இந்நிலையில், விமல் தன்னுடைய  தாயிடம் ரஞ்சித்குமாரின் கள்ளக்காதலை முடித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் தன் மகன் கூறியதை தாய் சற்று கூட மதிக்கவில்லை. இதனால் விமல் ரஞ்சித்குமாரின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இருவரும் சந்திக்க முடியாமல் மனவேதனைப்பட்டனர். ஆனால் ஊரடங்கையும் மீறி இருவரும் சில நாட்களுக்கு முன்னால், தன்னந்தனியாக ஒதுக்குப்புறத்தில் சந்தித்துள்ளனர்.

இதனை கண்டுபிடித்த விமல் ரஞ்சித்குமாரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதன்படி 26-ஆம் தேதியன்று ரஞ்சித்குமார் தன்னுடைய நண்பருடன் மீஞ்சூர் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள செங்கல் சூளை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஏற்கனவே அங்கிருந்த மர்மநபர்கள் ரஞ்சித்குமாரையும், அவருடைய நண்பரின் தாக்க தொடங்கினர்.தாக்குதலிலிருந்து ரஞ்சித்குமார் என் நண்பர் தப்பித்து விட்டு ஊருக்கு சென்று ஆட்களை வரவழைக்க முற்ப்பட்டார். ஆனால் ஆட்கள் வருவதற்குள், மர்ம நபர்கள் ரஞ்சித்குமாரை கொலை செய்துவிட்டனர். மேலும் அவருடைய மர்ம உறுப்பையும் துண்டித்துவிட்டனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் விமல், அவருடைய நண்பர் பிரேம், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது மாங்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.