செம வைரல்! ராணுவ உடையில் அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படங்கள்!

நடிகர் அஜித்குமாரின் மகனான ஆத்விக்கின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்குமார். இவரது மகனான ஆத்விக்கை குட்டி தல என்று அஜித் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி பிறந்த ஆத்விக், தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது அவர் அணிந்திருந்த உடை மற்றும் புன்முறுவல் ஆகியவை ரசிகர்களை கவர செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் உடை அணிந்திருந்த ஆத்விக், புன்னகை பூத்தபடி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்தியக் கடற்படை மற்றும் ராணுவத்தின் உடையுடன் மிடுக்காக தோற்றமளித்த ஆத்விக், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவரது புன்சிரிப்புடன் கூடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்தப் புகைப்படங்களை அஜித் குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளங்களில் அவரது புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. பலரும் ஆத்விக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.