குடிபோதை..! 26 வயது மருமகனால் 55 வயது மாமியாருக்கு நடக்க கூடாதது நடந்தது..! என்னாச்சு தெரியுமா?

குடிபோதையில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொடைக்கானலில் உள்ள உகார்தே நகர் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். 26 வயதாகும் கண்ணன் இதே பகுதியை சேர்ந்த ஏசு என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். குடி பழக்கத்திற்கு அடிமையாகிய கண்ணன் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வருவார். இந்நிலையில் கண்ணன் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு குடிபோதையில் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது குடிபோதையில் கண்ணன் பணம் கேட்டு தகாத வார்த்தையில் பேசியதால் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகமானதால் கோபமடைந்த மருமகன் கண்ணன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது 55 வயது மாமியார் லக்ஷ்மியை தலையில் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் சத்தம் அதிகமாக கேட்டதால் அருகே பக்கத்து வீட்டில் வசித்து வந்த அனுஷா என்ற 18 வயது பெண் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்றார். 

போதையில் இருந்த கண்ணன் அனுஷ்காவையும் கத்தியால் குத்திவிட்டு பொதுமக்கள் துரத்தியதால் அங்கிருந்து ஓடிவிட்டான். இதனால் படுகாயம் அடைந்த லட்சுமி மற்றும் அனுஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.