மாமனார் முன்னிலையில் மாமியார் மீது கை வைத்து மருமகன்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த மருமகனை மாமனார் கொலை செய்த சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இடையர்ப்பாளையம் என்னும் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கவுண்டம்பாளையம் பகுதியில் சக்தி நகர் என்னுமிடம் உள்ளது. இங்கு தங்கமணி குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகள் ஷாலினி. இவர் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்படததால் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில் தாய் வீட்டிலிருந்து மனைவியை அழைத்து வர ராஜேந்திரன் சென்றிருந்தார். அப்போது "சம்பாத்தியமில்லாத வக்கத்தவனுடன் பெண்ணை அனுப்பி வைக்க முடியாது" என்று மாமியார் கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மாமியாரையும், மனைவியையும் தாக்கியுள்ளார். 

இதுகுறித்து மாமியார் தங்கமணியிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தங்கமணி ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி போய் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தன் கையிலிருந்த கத்தியால் ராஜேந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்தனர். 

கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கமணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.