ஹாஸ்பிடலுக்குள் டாக்டருடன் தனிமையில் இருந்த இளம் பெண்..! தகவல் அறிந்து வந்து வெளியே பூட்டிய மாமனார்..! திருப்பத்தூர் பகீர்!

மருத்துவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த பெண்ணை அரசியல் பிரமுகர்கள் அடித்து துன்புறுத்திய சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மனோஜ் குமார் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள கட்சேரி தெருவிலுள்ள தன்னுடைய வீட்டில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய மனைவி மருத்துவம் மேல்படிப்புக்காக வெளியூரில் தங்கியுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் மனோஜ் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கமானது நாளடைவில் கிளினிக்கில் சந்திப்பது வரை சென்றுள்ளது. நாளடைவில் மனோஜ்குமாரின் மாமனாரான ரவிக்கு, இந்த நெருக்கம் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு நேரத்தில் அந்தப் பெண் மனோஜ்குமார் கிளினிக்கில் இருப்பதை ரவியும் அவருடைய மனைவியும் கண்டறிந்துள்ளனர். உடனடியாக வெளிப்புறமாக கிளினிக்கை பூட்டினர். பின்னர் தனக்கு வேண்டிய அரசியல் கட்சி பிரமுகர்களை அழைத்து கிளினிக் முன் கூட்டம் சேர்த்தார்.

பின்னர் கிளினிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்  கூறுவதைகூட கேட்காமல் அங்கிருந்தோர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். வயிறு, முகம், கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர் திருப்பத்தூர் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர் வந்த பிறகும் ஆர்ப்பாட்டம் ஒழிந்தபாடில்லை.

பின்னர் ஒருவழியாக கலவரத்தை காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினர். அந்த பெண்ணிடம் "எனக்கும் மனோஜ்குமாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று எழுதி வாங்கி கொண்டனர். நள்ளிரவு வரை தகராறு தொடர்ந்து நீடித்துள்ளது.  அதன் பின்னர் அந்த பெண் விடுவிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தரப்பில் இதுவரை காவல்துறையினருக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.