குழந்தைக்காக கோவில் கோவிலாக சென்ற மனைவி! கேப்பில் மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்! அதிர வைக்கும் சம்பவம்!

உத்திரபிரதேசத்தில் மருமகனும் மாமியாரும் நெருங்கி பழகியதால் பிறந்த குழந்தையை தான் தத்து எடுத்து விட்டதாக கூறி மனைவியிடம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுவரை நாம் பல கள்ளக்காதல் சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் சற்று வித்தியாசமான கள்ளக்காதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆம் மருமகனுக்கும் மனைவியின் தாயாருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.

இதற்காக அந்த பெண் ஏறாத கோயில் இல்லை .. கும்பிடாத சாமி இல்லை..எப்படியாவது தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று வந்தபின் மிகவும் துடியாய் துடித்து இருந்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர், தன் மனைவியின் தாயாருடன் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். மருமகனும் மாமியாரும் இணைந்து ஜாலியாக இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தினால் மாமியார் கருவுற்று இருக்கிறார். இதனைப் பற்றி அறிந்த மருமகன் தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று எண்ணி சந்தோஷப் பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து தன்னுடைய மாமியாரை யாருக்கும் தெரியாமல் தனியாக ஒரு ஊருக்கு அழைத்துச் சென்றும் மருத்துவமனையில் வைத்து பிரசவம் பார்த்திருக்கிறார். அவருக்கு நல்ல முறையில் அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையைக் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்தவர் இந்த குழந்தையை நான் தத்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட அந்த நபரின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்து இருந்திருக்கிறார்.

உடனே அந்தப் பெண் அந்த குழந்தையை வாரி எடுத்து கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். தன்னுடைய சொந்த குழந்தையாகவே பாவித்து வளர்க்க ஆரம்பித்த அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. இந்த பெண்ணின் கண் அவருடைய நண்பர் ஒருவர் இந்த குழந்தையானது தனது கணவருக்கும் தன்னுடைய சொந்த தாயாருக்கும் ஏற்பட்ட உறவினால் பிறந்தது என்ற உண்மையை கூறியிருக்கிறார். இதனால் அந்தப் பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது அந்தப் பெண் மற்றும் அவரது தாயாரின் குழந்தையின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.