தாயின் கிட்னி! தந்தையின் ரூ.3 கோடி சொத்து! பறித்துக் கொண்டு இருவரையும் நடுத்தெருவில் விட்ட மகன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பெற்றோரிடமிருந்து ரூபாய் 3 கோடி மதிப்பிலான சொத்துகளை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகனிடம் இருந்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் சொத்துக்களை மீட்டு கொடுத்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.


பெரியசாமி மற்றும் சகுந்தலா தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு அருண் குமார் என்ற ஒரு மகனும் உள்ளார். பெரியசாமி தன் மகன் கஷ்டப்பட கூடாது என்பதற்காக சம்பாதித்து சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பில் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். 

இந்நிலையில் அருண் குமாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அருண் குமாருக்கு திடீரென்று சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இந்த பாதிப்பிலிருந்து விடுபட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் . 

இதன்படி அருண் குமாரின் தாயார் சகுந்தலா தன்னுடைய ஒரு கிட்னியை தன் மகனுக்கு அளித்திருக்கிறார். இதனையடுத்து அருண்குமாரின் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவரும் உடல்நலம் தேறினார். அருண்குமார் உடல்நிலை சரியான பின்பு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்து இருக்கின்றனர்.

திருமணம் நடந்த சில நாட்களிலேயே தன்னுடைய மகனுக்கு தங்களுடைய சொத்து அனைத்தையும் தானமாக எழுதி தந்திருக்கின்றனர். தந்தையின் சொத்தை பெற்றுக்கொண்டு சிறிதுகூட நன்றி இல்லாமல் அருண்குமார் தன்னுடைய பெற்றோரை கவனிக்காமல் இருந்திருக்கிறார்.

இதன் உச்சகட்டமாக அருண்குமார் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கொண்டு தனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார். முதுமை தழும்பும் அந்த வயதில் பெற்றோர்கள் இருவரும் இருக்க இடமின்றி தவித்து வந்திருக்கின்றனர்.

பின்னர் அந்த பகுதியில் அமைந்திருக்கும் முதியோர் இல்லம் ஒன்றில் இருவரும் போய் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். அருண்குமாரின் பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்து உள்ளனர். 

இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வ நாயகி , அருண்குமாரை விசாரித்து அவர் மீது தவறு இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகி உள்ளது .பின்னர் அருண்குமார் இடமிருந்து சொத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு மீண்டும் பெரியசாமி இடம் வழங்கப்பட்டது.

மேலும் மற்றொரு முறை தன்னுடைய தந்தையிடம் இருந்து சொத்துக்களை அபகரிக்க கூடாது எனவும் அருண்குமார் இடம் அதிகாரிகள் கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். ஒருவேளை மீண்டும் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனைப்பற்றி அருண்குமாரின் பெற்றோர் பெரியசாமி மற்றும் சகுந்தலா தம்பதியினர் , தங்களுடைய ஒரே மகனை நம்பி அவனுக்கு கிட்னியையும் அனைத்து சொத்தையும் தானமாக எழுதி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.