பாம்புகளிடம் இருந்து கிடைக்கிறதா நாகரத்தினம்? அறிவியல் ஆதாரம் இதோ!

நாகமாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பல கருத்துக்கள் நிலவி வருகிறது.


இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும் கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால் கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை. நாக மாணிக்கம்” என்பது தொடர்பாக பொதுவாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளதும் பலராலும் நம்பம்பட்டு வருவதுமான கருத்து….!!!!

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு.

இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது. இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும் பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை! நாகரத்தினகல் பற்றிய இன்னொரு கருத்தும் உள்ளது.

நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர், மிருகம், கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும். இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம். எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.

இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில் அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும். இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும். ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.

இப்படிப்பட்ட நாகங்கள் இளமையை பாதுகாப்பதில் வலு கெட்டிகாரர்கள் சுமார் 110-150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகரத்தினமாக உருவாகும். நாக ரத்தினம் இந்த பாம்புகளுக்கு உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டனவாக காணப்படும். இதுதவிர இவைக்கு வேறுபலன் கிடையாது கண்பார்வை மங்கி காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக இவை ஒளியின்றி இரை தேட வசதியின்றி இந்த நாக ரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது.

இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து உள்ளெடுத்துக் கொள்ளும். இவை பல நூறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகியது. இதனால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ளவர்கள் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். வாயில் வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும். பார்த்து கையாள்வது சிறந்தது. இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும். அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.