கடன் வாங்கப் போறீங்களா? பிராசசிங் கட்டணம் இல்லை! SBI அட்டகாச அறிவிப்பு!

விழா காலத்தை ஒட்டி எஸ்பிஐ வங்கியானது வட்டி சலுகைகளை அறிவித்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் நெருங்குவதன் காரணமாக இந்த சலுகைகளை sbi அறிவித்துள்ளது. அதன்படி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக குறைத்துள்ளது. அந்த வங்கியின் செயலியான yono மூலம் கடனுக்கு விண்ணப்பித்தால் புள்ளி 25

% மேலும் குறைக்கப்படும் என்று sbi அறிவித்துள்ளது. இதன் காரணமாக 8.45 சதவிகிதம் வட்டியில் கார் லோன் பெறலாம். சம்பளதாரர்களுக்கு 90 விழுக்காடு வரை கார் கடன் வழங்கப்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது. 10.75 சதவீதத்தில் தனிப்பட்ட கடனும் அந்த வங்கியில் வாங்கிக் கொள்ளலாம். இருபது லட்சம் வரையிலான கடனை ஆறு ஆண்டுகளுக்குள் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

5 லட்சம் ரூபாய் வரை உடனடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக sbi நிர்ணயித்துள்ளது. உள்நாட்டில் கல்வி பயில 50 லட்சம் ரூபாய் வரையிலும் வெளிநாடுகளில் கல்வி பயில ஒன்றரை கோடி ரூபாய் வரையிலும் அந்த வங்கி கடன் வழங்குகிறது.