அடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள்! அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்பதன் ரகசியம் தெரியுமா?

காஞ்சிபுரத்தில் 31 நாட்கள் சயன கோலத்திலும் 16 நாட்கல் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வந்த அத்தி வரதர் தரிசனம் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்தது. கடந்த 47 நாட்களில் மொத்தம் 1 கோடியே 4 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். அவரைப் பற்றிய சிறு கண்ணோட்டத்தை இங்கு பார்ப்போம்.


அத்தி வரதர் புராண வரலாறு

ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும்புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார்.எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்திமரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது.பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது.அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களைவேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.

பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார். அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.

ஆதியில் தோன்றிய அத்தி வரதர் நீருக்கடியே அறிதுயிலில் இருக்கிறார். பிரம்மதேவருக்குப் பெருமாள் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு பெருமாள் மேலே எழுந்தருளுவார். சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள். இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம். மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் சிலருண்டு. 1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் வெளியான அத்தி வரதர் இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

அத்தி வரதர் அலங்காரம்

காஞ்சிபுரம் என்றாலே பட்டுக்கு பெயர் பெற்றது என்பதால், அத்தி வரதர் தினமும்விதவிதமான பட்டு சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, காண்போரை பிரமிக்கச் செய்தார். அதோடுஅவருக்கென பல்வேறு வகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. சில நாட்களில் அத்திவரதர் பட்டு வஸ்திரங்களுக்கு பதிலாக, முழுவதும் மலர்களால் உடை போன்று அலங்காரம் செய்யப்பட்டுஅழகாக காட்சி அளித்தார். இதில் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது என்னவென்றால்,வெண்கலத்தால் செய்யப்பட்ட கீரீடத்தை தவிர எந்த ஒரு ஆபரணங்களும் போடப்படாமல், முழுவதும்மலர்களால் செய்யப்பட்ட ஆடை சில நாட்கள் அணிவிக்கப்பட்டதும் உண்டு..

விழாவின் 47 ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிற பட்டாடை ரோஜா நிறஅங்கவஸ்திரம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பெருமானுக்கு என்று பிரத்யேகமாகசெய்யப்பட்டிருந்த பாதாம் பருப்பு முந்திரி மாலையும் கதம்பமாலை களும் அணிந்திருந்தார்சகஸ்ரநாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்கள் நடத்தப்பட்டது 48 ஆவது நாளான சனிக்கிழமைஇன்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நிறைவுபெற்று மாலையில் அனந்தசரஸ் திருக்கோலத்தில்பெருமாள் எழுந்தருள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அத்தி வரதரை சேதமடையாமல்பாதுகாக்கும் தைலக்காப்பு

வலிமை வாய்ந்த மரமான அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக சிலவித எண்ணெய்களால் தேய்க்கப்பட்டு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளார்.

இதனால் 40 வருடங்கள் தண்ணீரில் இருந்தாலும், வரதர் எந்த சேதமும் அடையாமல் அதே புன்னகையுடன் காட்சி அளிக்கின்றார். அத்தி வரதர பெருமாள் சிலை 40 ஆண்டுகள் நீர் நிறைந்த கோயில் குளத்தில் வைக்கப்படுகிறது.

அதற்கு முன் பச்சை கற்பூரம், லவங்கம், ஏலக்காய், சாம்பிராணி, சாதிக்காய், வெட்டி வேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அந்த தைலம் தான் அத்தி வரதர் சிலை மீது பூசப்பட உள்ளது. பொதுவாக ஒரு சிலைக்கு தைலக் காப்பு என்றால் இப்படி தான் செய்து பூசப்படுவது வழக்கம். அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் இந்த தைலக் காப்பு சிலையை மேலும் வலுவானதாக ஆக்கும்.

அனந்தசரஸ் குளத்தின் சிறப்பு

ஏன் அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கிறார்கள்? இதற்கு முன்னதாக48 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் 54 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சுவாமியை வெளியே எடுத்துஉள்ளனர் ஆனால் மனித வாழ்வில் ஒரு முறையேனும் இந்த பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றுபக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க பெருமாள் தன்னை 40 வருடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து48 மக்கள் வழிபட பணித்துள்ளார் கோவிலில் சிறப்பு என்றால் அது 24 ஏன் 24 குளத்திற்குஅருகில் உள்ள தீவுகளை பார்க்க வேண்டுமென்றால் 24 படிகள் கீழிறங்கி தான் சொல்லவேண்டும்கோயில் மூலவர் வரதராஜர் பார்க்க வேண்டுமென்றால் இருபத்து நான்கு படிகள் மேலே ஏறித்தான்செல்ல வேண்டும் இந்த கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் இருபத்து நான்கு நிலைகளைக் கொண்டுள்ளதுஇவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றன

அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் குளம் இதுவரை வற்றியது இல்லைஎன அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கினறனர். சில கோயில்களில் கோடை காலத்தின் போதுவெப்பத்தால் குளம் வற்றுவது வழக்கமாக இருந்தாலும் இங்கு குளம் எப்போதும் தண்ணீரால்நிரம்பியே காணப்படுகின்றது. இந்தக் குளத்தில்3 ஊற்றுகள் இருக்கின்றன. 5 அடியில் ஒரு கிணறு இருக்கின்றது. அது வராக தீர்த்தம். 20 அடியில் ஒரு கிணறு, அதுசக்கர தீர்த்தம். இந்த இரண்டு கிணறுகளிலிருந்தும் ஊற்று வந்து கொண்டேயிருக்கும்.

கிட்டத்தட்ட 2 கோடி லிட்டர் தண்ணீரை இந்தக் குளத்திலிருந்து எடுத்து அருகிலுள்ளபொற்றாமரைக் குளத்தில் வைத்திருக்கிறார்கள்.

அத்தி வரதர் குளத்துக்குள்அனந்த சயனம் கொள்ளும் இடம்

அத்தி வரதரை குளத்திற்குள் வைக்கும் அறையில் பல நாக சிலைகள் சூழவைக்கப்பட்டிருந்ததாகவும் வரதரின் தலை பகுதியில் ஆதிசேஷன் சிலையும் இருப்பதாக தெரிவித்தனர்.

இன்றிரவு 10 லிருந்து12 மணிக்குள்ளாக அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும்.குளத்தின் பாதாள அறையில் செங்கல் தரையில் தான் அத்திவரதர் சயனம் கொண்டிருப்பார். சிலையின்தலைக்கடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது சில தாந்திரீக, மந்திர முறைகள்செய்யப்படும் என்பதால் கோயில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் அந்த பாதாள அறைக்குள்அனுமதிக்கப்பட மாட்டார்கள்.