சின்மயி போட்டோவை வைத்து ஆண்கள் செய்யும் அருவெறுப்பான செயல்! சின்மயியே வெளியிட்ட திடுக் தகவல்!

தான் சேலை கட்டி வெளியே வந்தால் தன்னை புகைப்படம் எடுத்து ஆண்கள் செய்யும் அருவெறுப்பான செயல் குறித்து பாடகி சின்மயி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.


ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சின்மயியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில் பாடல் பாட நீங்கள் மேடை ஏறும் போது புடவை கட்டி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். மேலும் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் போட்டு நீங்கள் மேடை ஏறும் போது தமிழக மக்களுக்கு அன்னியப்படுவதாகவும் அந்த ரசிகர் கூறியிருந்தார்.

 

   அந்த ரசிகருக்கு சின்மயி அளித்த பதில் தான் பலரையும் திடுக்கிட வைத்தது. அதாவது அந்த ரசிகருக்கு சின்மயி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: துவக்கத்தில் தான் புடவை கட்டி தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாக சின்மயி கூறியிருக்கிறார்.

 

   இசை நிகழ்ச்சி மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, திரைப்பட இசை வெளியீடாக இருந்தாலும் சரி புடவையுடன் தான் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட புடவையில் தான் வந்து கொண்டிருந்ததாக சின்மயி கூறியிருக்கிறார்.

 

   ஆனால் சிலர் தான் புடவை அணிந்து வெளியே வரும் போது தன்னுடைய அடிவயிறு மற்றும் மார்பகத்தை க்ளோசப்பில் புகைப்படம் எடுத்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிவிடுவது தன்னுடைய கவனத்திற்கு வந்ததாக சின்மயி கூறியுள்ளார். இதனை பார்த்து தான் முதலில் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

 

  பின்னர் சிலர் வரம்பு மீறி அந்த புகைப்படத்தை பார்த்து தான் சுய இன்பம் செய்ததாக கூறி எனக்கே மெசேஜ் அனுப்பியதாகவும் இதனை எல்லாம் கேட்டு என்னால் நிம்மதியாக இரக்க முடியவில்லை என்று சின்மயி தெரிவித்துள்ளார். அதாவது நான் புடவை அணிந்தால் என்னுடைய மார்பகத்தின் ஓரப்பகுதியை க்ளோசப்பில் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று குறைபட்டுக் கொண்டார் சின்மயி.

 

   இது போன்ற ஆண்கள் செய்யும் சில அருவெறுப்பான செயல்களால் தான் தற்போது பெரும்பாலும் தான் புடவை அணிவதில்லை என்று சின்மயி தெரிவித்துள்ளார். மேலும் ஜீன்ஸ் அணிந்தாலும் சரி புடவை அணிந்தாலும் சரி தான் பாரம்பரியமிக்க தமிழ் பெண் தான் என்றும் சின்மயி கூறியுள்ளார்.