சமீப காலங்களில் கணவன் மனைவியிடையே விவாகரத்துகள் அதிகளவில் நடைப்பெற்று வருவதாக ஆய்வொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெண் அதிகாரியை விரட்டி விரட்டி அடித்த உறவினர்கள்! மனைவியை கணவனுடன் சேர்ந்து வைக்கச் சென்றதால் விபரீதம்!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு வினோதமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினர். நீதிபதி அவர்கள், அவர்களை சேர்த்து வைப்பதற்கு ஒரு சமூக நலத்துறை பெண்னை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பெண்னை இருவரும் அடித்து உதைத்துள்ளது, அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தூதூர்மட்டம் என்கிற கிராமம் அமைந்துள்ளது. அங்கு மளிகை கடை நடத்தி வருபவர் விஸ்வநாதன்.இவருக்கு திருமணம் நடந்துள்ளது. மனைவியின் பெயர் அனுசுயா. ஆனால் இருவர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்றனர். பின்னர் விஸ்வநாதன், வலைதளங்கள் மூலம் மறுமணம் செய்ய மணப் பெண் வேண்டும் என விளம்பரம் செய்தார்.
இதன் பலனாக, மூன்று வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனுராதா என்ற பெண்னை, மூன்று வருடங்களுக்கு முன்பு 25 சவரன் நகை மற்றும் 5லட்சம் ரூபாய் வரதட்சணையாக பெற்று திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அவரை, தூதூர்மட்டம் கிராமத்திற்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்தார்.
அனுராதாவிற்கு நாமக்கலில் சொந்த வீடு ஒன்றுள்ளது. அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி அமைக்குமாறு விஸ்வநாதன் அனுராதாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அனுராதாவின் குடும்பத்தார் அவருக்கு விவாகரத்து செய்து வைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். அனுராதா அவருடன் சேர்ந்து வாழ பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் முடியாத நிலையில், பெண்கள் பாதுகாப்பு சமூக நலத்துறை அதிகாரியை நாடியுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, பின்னர் நடுவர் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவு நகலலை பெற்று கணவர் விஸ்வநாதன் வீட்டில் அனுராதாவை பாதுகாப்புடன் விட்டு வர, காவல் ஆய்வாளர் அப்பாதுரை மற்றும் அதிகாரிகளுடன் சமூக நலப்பெண் சென்றுள்ளார்.
அங்கு சென்றபோது சமுக நலத்துறை அதிகாரியை விஸ்வநாதன், தரக்குறைவாக பேசியுள்ளார். இதில் போலீசாருக்கும் அவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், விஸ்வநாதன் தாயார் கமலம் அனுராதாவை தாக்க முற்பட்டார்.
ஆனால் அவர் விலகினார். அருகில் நின்றிருந்த சமுக நலத்துறை அதிகாரி மீது அடி விழுந்ததில் அவரது தோல் பட்டையில் காயம் ஏற்பட்டு அவரை உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து தன்னை தாக்கியதாக விஸ்வநாதனின் தாயார் கமலம் மீது கொலக்கம்பை காவல் நிலையத்தில் சமூக நல அதிகாரி புகார் அளித்துள்ளார்.