எனக்கு அழகான மனைவி கிடைத்து இருக்கிறாள்..! ஆனால் அவர்களுக்கு? கேலிக்கு உள்ளான மணமகனின் 11 வருட காதல் கதை! நெகிழ்ச்சி சம்பவம்!

11 ஆண்டுகளாக ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் வாழ்க்கை தற்போது கசந்துள்ள சம்பவமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவை சேர்ந்தவர் அர்னேஷ் மித்ரா. இவருடைய பள்ளித்தோழியின் பெயர் எக்தா பானர்ஜி. இருவரும் பள்ளியிலிருந்தே மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். கடந்த 11 ஆண்டுகளாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். படித்து முடித்து பட்டம் பெற்ற பின்னர், தங்களுடைய காதலை இருவரும் இரு வீட்டிலும் கூறியுள்ளனர்.

திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் தான் அவர்களுடைய வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட தொடங்கின. அனைத்து புதுமண தம்பதிகளை போன்று இவர்கள் தங்களுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். புகைப்படத்தில் அரினேஷ் சற்று உடல் பருமனாக காணப்படுகிறார். அதுமட்டுமின்றி, எக்தா மிகவும் அழகாக உள்ளார்.

இந்த அழகு வேறுபாட்டை முன்னிலைப்படுத்தி பலரும் இருவரையும் கலாய்த்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை திருடி பலரும் மீம்ஸ் பக்கத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ் பக்கத்தின் மீது ஃபேஸ்புக்கில் புகாரளிக்க முற்பட்டபோது அவருடைய கணவர் அதனை தடுத்துவிட்டார்.

இதுகுறித்து எக்தா பானர்ஜி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த 11 வருடங்களாக இதுபோன்று நிறைய சம்பவங்களை பார்த்துவிட்டோம். இந்த உலகம் உடல் தோற்றத்தை மட்டுமே காண்கிறது. நல்ல குணம் மற்றும் உள்ளம் படைத்தவராக என்பதனை பற்றி ஆராய தவறுகிறது" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அர்னேஷ் தன்னுடைய ஃபேஸ்புக்கில், "உண்மையாக சொல்கிறேன். என்னாலும் நம்ப இயலவில்லை எனக்கு இவ்வளவு அழகான மனைவி கிடைத்ததை நினைத்தால். நாங்கள் இருவரும் 11ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளோம். நீங்கள் நடத்தும் மீம்ஸ் பக்கங்களில் லைக்குகள் குறைவாக வருவது போன்று தோன்றுகிறது. அதை சரி செய்வதற்கு கருத்துக்கள் இல்லாமல் தவித்து வருவதும் தெரியவருகிறது" என்று கிண்டலடித்திருந்தார்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.