உயிருடன் இருக்கும் கொடிய விஷப்பாம்பை தரதரவென தரையில் இழுத்துச் சென்று மூதாட்டி செய்த செயல்..! என்ன தெரியுமா?

வயதான மூதாட்டி ஒருவர் அச்சமின்றி தன்னுடைய கைகளிலேயே மலைப்பாம்பு ஒன்றை பிடித்து நடந்து சென்ற வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மூதாட்டி ஒருவர் எந்தவித பயமுமின்றி பாம்பு ஒன்றை பிடித்து வீதியில் தைரியமாக நடந்து செல்கின்றார். இதனை அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

100 மீட்டர் தூரம் அளவிற்கு பாம்பை எடுத்துக்கொண்டு தைரியமாக விறுவிறுவென்று அந்த பெண் நடந்து சென்றுள்ளார். இதனை வனத்துறை அதிகாரியான சுஸந்தா தாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அந்த பாம்பை ஒரு புதருக்குள் வீசுவது போன்று அந்த வீடியோ பதிவாகியிருந்தது

கடந்த சில நாட்களாக பாம்பு பற்றிய செய்திகள் வைரலானதை தொடர்ந்து இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.