சைக்கிளில் வேகமாக சென்ற இளைஞர்..! திடீரென குறுக்கே வந்த நல்ல பாம்பு..! அடுத்த நொடி அரங்கேறிய திக் திக் சம்பவம்! வைரல் வீடியோ உள்ளே!

இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் சென்ற போது குறுக்கே வந்தப் பாம்பு அவர்களின் சைக்கிளின் சக்கரங்களில் சிக்கி கொண்டு தவிப்பதை பார்த்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பொதுவாகவே பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி தான் நம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். அந்த வகையில் பாம்பைப் பார்த்தாலே பலரும் திக்குமுக்காடி போய்விடுவோம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாகவே பாம்பை ஒரு சிலர் மிக அழகாகவும் சுலபமாகவும் கையாண்டு வருகின்றனர்.

நம்மில் பலருக்கு பாம்பில் நிறைந்திருக்கும் விஷத்தன்மை என்றால் அதன்மீது இருக்கும் அச்சம் இன்னும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்கு சான்றாக இந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கும் இளைஞர்கள் நாங்களும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை நிரூபித்துள்ளனர். 

அதாவது இளைஞர்கள் இருவர் ஒரே சைக்கிளில் ஒன்றாக பயணித்து வருகின்றனர் . ரோட்டில் அவர்கள் சைக்கிளை மிதித்து செல்லும்பொழுது ரோட்டின் குறுக்கே திடீரென மிக நீளமான பாம்பு வருகிறது. இந்த பாம்பு அந்த இளைஞர்கள் பயணித்த சைக்கிளின் சக்கரங்களில் வேகமாக வந்து சிக்கிக் கொள்கிறது.

இதை பார்த்து இளைஞர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி செல்கின்றனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு தற்போது நெட்டிசன் ஒருவரால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியோடு இடப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வண்ணம் உள்ளன . மேலும் இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.