மாணவியின் ஷுவுக்குள் படுத்திருந்த கொடிய நாகப்பாம்பு! பள்ளிக்கு புறப்பட்ட போது நேர்ந்த விபரீதம்!

பள்ளி மாணவியின் ஷூவுக்குள் நாகப்பாம்பு இருந்த சம்பவமானது திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். இதற்கு உட்பட்ட கரிக்ககொம் கோவில் பகுதியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக ஷூவை அணிய முற்பட்டுள்ளார். ஆனால் அவரால் எளிதில் அணிய இயலவில்லை. அப்போது ஷுவுக்குள் மலைப்பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனடியாக ஷுவை அவர் தூக்கி வீசியுள்ளார். பாம்பு தப்பித்து விடக்கூடாது என்பதற்காக சிறுமியின் தாயார் பாத்திரத்தை போட்டு ஷுவையும் மூடியுள்ளார். அதன்பின்னர் பிரபல பாம்பு பிடிப்பவரான வாவா சுரேஷ் என்பவரை அழைத்துள்ளார். 

வாவா சுரேஷ் திறமையாக செயல்பட்டு சீறிக்கொண்டு வெளியே வந்த மலைப்பாம்பை கையில் பிடித்தார். பின்னர் அந்த பாம்பை தரையில் விட்டபோது அதனால் நெளிய இயலவில்லை. உடனே தன்னுடைய பையில் பாம்பினை போட்டுக்கொண்டு வாவா சுரேஷ் சென்றுள்ளார்.

இந்த சம்பவமானது திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.